யாழ்ப்பாணம் – இளவாலை – உயரப்புலம் பகுதியில், 6 வயது குழந்தைக்காக சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், சம்பவம் நடந்த நாளில் அந்த சிறுமிக்கு அவரது தந்தையால் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டுள்ளது. உணவை உட்கொண்டவுடன் சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை சீராக இருப்பதாக மருத்துவமனையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் குடும்பத் தகராறு இருந்திருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.