பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்கத் தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பதுளை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வண்டிகளின் சேசிஸ் எண் மற்றும் எஞ்சின் எண்கள் ஒரே இலக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந் நிலையில், இந்த வாகனங்களில் எது போலியானது என்பதைக் கண்டறிவதற்காக அவை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. பகுப்பாய்வு அறிக்கையின் பின்னர், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் ஆரம்ப கட்டத்தில், இந்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் முந்தைய காலங்களில் பல்வேறு நபர்களிடம் மாறி மாறி சொந்தமாக இருந்ததுடன், அவை தொடர்பான ஆவணங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.