அட்டாளைச்சேனை 07, ரஹ்மானியாபாத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்துல் கபூர் பாத்திமா நுஹா, இக் கிராம பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் மருத்துவராக வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பெறுபேறுகளில், பாத்திமா நுஹா உயிரியல் பிரிவில் கற்றுத் அம்பாறை மாவட்டத்தில் 19வது நிலையைப் பெற்றுள்ளார். அவரது வெட்டுப்புள்ளி 2.1012 ஆகும்.
பாத்திமா நுஹா, தனது ஆரம்பக் கல்வியை அல் அர்ஹம் வித்தியாலயத்தில் மற்றும் உயர்தர கல்வியை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) கற்றார்.
பெளதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் “A” தர பெற்றுள்ளார்.
அவர், ஏ. அப்துல் கபூர் மற்றும் எம். ஆயிஷா ஆகியோரின் புதல்வி ஆவார்.
இத்திறமையான சாதனையை பாராட்டி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களால், பாத்திமா நுஹாவை அட்டாளைச்சேனை 07 பகுதியில் வைத்து கௌரவிக்கும் நிகழ்வும் அண்மையில் நடத்தப்பட்டது.
இவ் வெற்றி, அட்டாளைச்சேனையிலும் குறிப்பாக பெண்கள் இடையே உயர்கல்வி மீது ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக இருக்கக் கூடும்.