Top News
| 5 மாதங்களில் 43 துப்பாக்கி பிரயோகங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயம் | | ஜூன் முதல் மின்சாரக் கட்டணம் 18.3% உயர வாய்ப்பு | | அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் இருந்து முதல் பெண் மருத்துவர் தெரிவு – வரலாற்றுச் சாதனை படைத்த பாத்திமா நுஹா |
May 17, 2025

அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா – நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பங்கேற்பு

Posted on May 17, 2025 by Admin

(அபூ உமர்)

அட்டாளைச்சேனை பகுதியில், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இவ்வருடம் உயர்தரத்தில் சிறப்புப் பெறுபேறுகள் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கௌரவம் செலுத்தும் நோக்கிலும், சிறப்புவிழா ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு அல்ஹாஜ் ஏ.எல். பாயிஸ் (ADE) அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது.

அல் அர்ஹம் வித்தியாலயத்தில் முன்னர் கல்வி கற்று தற்போது பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு கௌரவப் பரிசுகள் வழங்கும் நிகழ்வுகளை திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, தொழிலதிபர் கே.எல். அஸ்வர், மற்றும் FFF Fashion உரிமையாளர் எஸ்.எல். பஸ்மீர் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டார். மேலும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பங்குபற்றிய முக்கிய பிரமுகர்கள்:

  • யூ.எல். வாஹித் (ஓய்வு பெற்ற ADE, சூரா சபைச் செயலாளர்)
  • ஏ.சி. சமால்தீன் (மாவட்ட செயலாளர்)
  • பிரதேச சபை உறுப்பினர்கள்: ஏ.எஸ்.எம். உவைஸ், ஐ.எல். அஸ்வர் சாலிஹ்
  • தொழிலதிபர்கள்: ஏ.கே. அமீர், அல்ஹாஜ் ஐ.எல். சஹீல்
  • முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்: ஐ.எல். நசீர்
  • சமூக சேவையாளர்கள்: யூ.எல். சம்சுதீன்(ஓய்வு நிலை முகாமையாளர்), எம்.ஏ. அன்சார்(ஓய்வு நிலை அதிபர்), எச்.எல்.எம். பஷீர் மௌலவி(ஆசிரியர்), எஸ்.எம்.எம். ஜமீல்

இந்நிகழ்வின் வாயிலாக மாணவர்களின் வெற்றியைப் பாராட்டி ஊக்குவிக்கும் முயற்சி, சமூகத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.