இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களில் 29 துப்பாக்கி பிரயோகங்கள், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை எனவும், குற்றவாளிகளை அடையாளம் காணும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.