அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 8 வட்டாரங்களில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களுடன் கலந்துரையாடலும், கட்சியால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியில் ஒப்பமிடும் நிகழ்வும் இன்று (16.05.2025) மக்கள் பணிமனையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பை மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ஏ. சி. சமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.