இலங்கை மின்சார சபை முன்வைத்த மின்கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தற்போது பரிசீலித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவ்வருடம் மே 20ஆம் திகதியில் இருந்து, இந்த பரிந்துரையைச் சார்ந்த மாற்று யோசனைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. 9 மாகாணங்களை உள்ளடக்கும்வண்ணம், மே 23ஆம் திகதி முதல் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமாக கருத்துக்கள் பெறப்படும்.
பொதுமக்கள் மற்றும் பிற குழுக்கள் வழங்கும் அனைத்து பரிந்துரைகளும் மற்றும் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டதின் பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் சுமார் 18.3% அளவில் மின்கட்டணத்தை உயர்த்தும் முன்மொழிவு நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் மாதம் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.