கொழும்பில் நாளை (மே 19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் தினத்தை முன்னிட்டு, பத்தரமுல்ல பகுதியில் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலில் வைக்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
இந்த போக்குவரத்துத் திட்டம், விழா நிகழ்வுகள் எவ்வித தடையுமின்றி நடைபெறுவதற்காகவும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபரங்களை பொலிசார் விரைவில் வெளியிடவுள்ளனர், எனவே பொதுமக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.