Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடு பாதுகாப்பு அமைச்சர் வாக்குமூலம்

Posted on May 20, 2025 by Hafees | 277 Views

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடுகளில்அரசியல் தலையீடுகள் உள்ளமை புலனாய்வுத் தகவல்களில் இருந்து உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதியின் பெயர் விரைவில் அம்பலமாகும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜெபாலக் கூறியுள்ளார்.