Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அஸ்வெசும நலன்புரித் தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு!

Posted on May 22, 2025 by Hafees | 207 Views

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

மொத்தம் 14 இலட்சம் பயனாளிக் குடும்பங்களுக்காக ரூ.11 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்காக தகுதியான பயனாளிகள், தங்களது வங்கிக் கணக்குகள் மூலமாக மே மாத கொடுப்பனவுகளைப் பெறலாம் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.