Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இலங்கையின் 53வது குடியரசு தினம் தேசிய ரீதியில் கொண்டாடப்படுகிறது

Posted on May 22, 2025 by Hafees | 328 Views

இலங்கையின் குடியரசு தினம் இன்று (மே 22) தேசிய ரீதியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இன்று இலங்கை, பிரித்தானிய பேரரசிலிருந்து முழுமையான சுதந்திரம் பெற்ற 53வது ஆண்டில் நுழைகின்றது.

1815ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் இறையாண்மை பிரித்தானியர்களிடம் மாற்றப்பட்டு, அந்நாட்டு ஆளுநர் வழியே நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி, இலங்கை சோல்பரி அரசியலமைப்பிலிருந்து விலகி, புதிய அரசியலமைப்பை அமல்படுத்தியதன் மூலம் நாட்டின் முழுமையான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டது.

அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தலைமையில் இருந்த பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில், இலங்கை டொமினியன் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டு, சுதந்திர குடியரசாக பிரகடனமாகியது.

இந்த முக்கிய நாளானது, நாடு முழுவதும் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுவதுடன், இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.