இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவரது டெஸ்ட் வீரராகக் கடைசி போட்டி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஜூன் 17 முதல் 21 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியாகும்.
இதனுடன், மெத்தியூஸின் 15 வருட டெஸ்ட் பயணம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.