காசா பகுதியில் நிலவும் மிகுந்த மனிதாபிமானத் தேவை மற்றும் சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து, இன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் சுமார் 90 லாரிகள் அங்கு அனுமதிக்கப்பட்டன.
காசாவில் சிக்கித் தவிக்கும் சுமார் 20 இலட்சம் மக்களுக்கு தினசரி 600 முதல் 800 லாரிகள் அளவிலான உணவு, மருந்து உள்ளிட்ட முக்கிய பொருட்கள் தேவைப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
கொடுங்கோலான இஸ்ரேல் கடுமையான பொருளாதார தடைகளுடன் பட்டினி சாவை தனது இறுதி உத்தியாக கைகொண்டுள்ளது. சர்வதேச சமூகம், குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளன. இதன் பின்னணியில் இன்று இந்த 90 லாரிகள் அனுமதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
உடனடியாக ஒரு பேக்கரி மீண்டும் செயல்படுத்தப்பட்டு, பசியால் வாடும் மக்களுக்கு பாண் மற்றும் ரொட்டிகள் தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. பாண் பெற ஆயிரக்கணக்கில் மக்கள் பல மணி நேரம் காத்துக்கொண்டு நிற்கும் காட்சிகள் காசா மக்களின் பசியின் கொடுமையையும் அவர்களின் மீதான பரிதாபத்தையும் வெளிப்படுத்துகின்றன.