ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜூன் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், இந்த தகவலை வெளியிட்டார்.
முன்னதாக, ஜனாதிபதி தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை பார்வையிட்டார்.
இந்நிலையில், ஜேர்மனி நோக்கி மேற்கொள்ளப்படும் இப்பயணம், ஜனாதிபதியின் முதலாவது ஐரோப்பிய நாடு பயணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.