இலங்கை ரக்பி அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ரொட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்து All Blacks அணியின் முன்னாள் உதவி பயிற்றுவிப்பாராகக் கடமையாற்றினார். ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரில் இலங்கை, தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.