இலங்கையின் தற்போதைய அமைச்சரவை அமைப்பில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க, “சில அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றும் தேவையை அரசு பரிசீலித்து வருகிறது. சில சமயங்களில் புதிய நபர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது,” என தெரிவித்துள்ளார்.
இது, நாட்டின் நிர்வாகத்தில் புதிய உந்துதலும், செயல்திறனும் ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதேசமயம், கடந்த காலங்களில் பெரிய அமைச்சரவைகள் பல்வேறு குறைபாடுகளுக்கு உள்ளாகியுள்ளன எனவும், தேசிய மக்கள் சக்தி (NPP) போன்ற கட்சிகள் சிறிய மற்றும் திறமையான அமைச்சரவையை வலியுறுத்தி வருவதையும் அவர் நினைவூட்டினார்.
இந்த மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அமைச்சரவை மறுசீரமைப்பு, நல்லாட்சியின் நோக்கில் முன்னெடுக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.