இன்று (சனிக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரையிலான பலத்த மழை பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீர் வழிப்பு, மின்னல் தாக்கம் உள்ளிட்ட இயற்கை அபாயங்களைத் தவிர்க்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.