இங்கிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோர் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெறும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார் என்பது சிறப்பு அம்சமாக உள்ளது.இந்தியா அணி, இங்கிலாந்தில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் வரவிருக்கும் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.இந்த அணியின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் பாராட்டத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, இளம் வீரர்களுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.