Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 427 பேர் பலி

Posted on May 25, 2025 by Hafees | 186 Views

மியன்மாரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் அயல் நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, பங்களாதேஷில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கடல் வழியாக இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லும் முயற்சியிலும் ரோஹிங்கியாக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பங்களாதேஷின் கோக்ஸ் பசார் அகதிகள் முகாமில் வசித்து வந்த ரோஹிங்கியாக்களில் 267 பேர் படகு மூலம் இந்தோனேசியாவுக்கு செல்ல முயற்சித்தபோது அவர்கள் சென்ற படகு மியான்மார் கடற்பகுதியில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 201 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 66 பேர் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் கடந்த 9-ம் திகதி நடந்துள்ளது.

இதேவேளை அதற்கு அடுத்த நாளான 10-ம் திகதி 247 ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மற்றொரு படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 226 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 21 பேர் உயிர் பிழைத்தனர்.

இந்த இரு நாட்களில் நடந்த படகு விபத்துகளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர்