Top News
| பீடி பிரியர்களுக்கு வந்த சோதனை | | சம்மாந்துறை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முக்கிய தீர்மானங்கள் | | தனது டிக்டொக் காதலனுக்காக நகை திருடிய யுவதி கைது |
Jul 29, 2025

இறக்காமம் – பொத்துவில் உள்ளூராட்சி ஆட்சிக்கு முஸ்லிம் காங்கிரசின் மந்திரக் கூட்டம்!

Posted on May 26, 2025 by Admin | 149 Views

உள்ளூராட்சித் தேர்தலையடுத்து, இறக்காமம் மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றிய முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (மே 25) புணானை ஐ.சி.எஸ்.டி வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில், கட்சியின் இறக்காமம், வரிப்பத்தான்சேனை மற்றும் பொத்துவில் பிரதேசங்களுக்கு உட்பட்ட மத்திய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், பிரதித் தலைவர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், பிரதித் தேசிய அமைப்பாளர் மற்றும் திகாமடுல்லை மாவட்ட எம்.பி. எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் எம்.பி. எம்.ஐ.எம். மன்சூர், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ. சி. சமால்தீன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள், உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் மூலம், உள்ளூராட்சி ஆட்சியை நிறுவும் நடவடிக்கைகள், கூட்டணி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி தொடர்பான கலந்தாய்வுகள் இடம்பெற்றன.