Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

ரயில் சாரதிகள் சுகயீன விடுப்பு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து

Posted on May 26, 2025 by Hafees | 314 Views

இன்று (மே 26) காலை பல ரயில் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம், ரயில் சாரதிகள் சுகயீன விடுப்பு அறிவித்ததாலே என ரயில்வே பிரதி பொது மேலாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இந்த காரணத்தால், இன்று காலை ஏராளமான பயணிகள் பயணத்திற்கேற்ப சிரமங்களை சந்தித்தனர். சுமார் 15 ரயில் சேவைகள் இன்று இயங்க முடியாமல் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி மேலும் விளக்கம் அளித்த பொல்வத்தகே கூறியதாவது:
“வார இறுதியில் சாரதிகள் தங்கள் தேவைகளுக்காக விடுப்பு கோரினாலும், ரயில்வே துறையால் அவை வழங்கப்படுவதில்லை. எனவே, அவர்கள் சுகயீன விடுப்பாக மாற்றி, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். இத்தகைய விடுப்புகள் காரணமாகவே இன்று பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.