Top News
| 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய 62 வயதுடையவர் கைது | | 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் | | பொத்துவில், உகன கல்வி வலயங்களுக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும் என பிரதமர் உறுதி |
Jul 26, 2025

அம்பலாங்கொடையில் ரயில் கோளாறு காரணமாக கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

Posted on May 27, 2025 by Hafees | 141 Views

கரையோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயங்கக்கூடும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்கின்ற எண் 311 இரவுத் தபால் ரயில், அம்பலாங்கொட பகுதியில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளானதால், மற்ற ரயில்களின் இயக்கத்திலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தாமதம் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பயணத்திற்கு முன் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.