Top News
| அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் | | இடைநடுவே நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை | | அக்கரைப்பற்றில் 2 வயது குழந்தை பிறந்த நாளில் மரணம் |
Jul 16, 2025

வைத்தியர்களின் வேலைநிறுத்த முயற்சி தோல்வி: டாக்டர் ஜவாஹிருக்கு தொடரும் ஆதரவு

Posted on May 28, 2025 by Admin | 234 Views

(இன்ஷாப்)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கல்முனை சுகாதார பிராந்தியத்தில் ஏற்பாடு செய்த வேலை நிறுத்தம் இன்று(28) பலனின்றி , தோல்வியில் முடிந்தது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜவாஹிருக்கு எதிராக இந்த வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், நோயாளர்களுக்கான அனைத்து மருத்துவ சேவைகளும் தடையின்றி இடம்பெற்றதாக மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில சுயநல வைத்தியர்களின் திட்டங்களினால் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்த சதிகளுக்குள் அகப்படாமல் மனிதநேயத்தை மறுக்காத வைத்தியர்களும் இவ்வைத்தியசாலையில் உள்ளனர் என்பதனை இன்று கடமையில் ஈடுபட்ட வைத்தியர்கள் நிரூபித்துள்ளனர்.

இதேபோன்று, பிராந்தியத்தின் மற்ற வைத்தியசாலைகளிலும் சிகிச்சை நடவடிக்கைகள் வழக்கம்போல் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாகவும், குறித்த வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக சில வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அதுவும் படு தோல்வியில் முடிந்ததிருந்தது.

அதே நாளில், அந்த வைத்தியருக்கு ஆதரவாக பல வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சில வைத்தியர்கள் தங்களது சுயநல நோக்கங்களுக்காக வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கையினால் அப்பாவி ஏழை நோயாளிகள் பாதிக்கப்படக் கூடும் என கடும் விமர்சனங்களும் எழுந்துவருகின்றன.