Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

புதிய கொவிட் 19 திரிபு: பி.சி.ஆர். பரிசோதனை அதிகரிப்பு

Posted on May 28, 2025 by Admin | 190 Views

புதிய கொவிட்-19 திரிபு உருவாக்கியுள்ள உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சு முக்கிய மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, “பி.சி.ஆர். பரிசோதனை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தற்போது கொவிட்-19 நோயாளிகளை கண்டறிய அதிக கவனத்துடன் செயற்படுகின்றன” என்று தெரிவித்தார்.

மேலும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ளுமாறு மருத்துவமனைகளுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமை சீராக உள்ளதாகவும், அது தொடரும் வகையில் சுகாதார அமைச்சு அனைத்துக் நடவடிக்கைகளையும் எச்சரிக்கையுடன் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், தற்போதைக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் (restrictions) விதிக்கப்படாது என்றும், தேவையெனில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டுமக்களுக்கு வேண்டுகோள்:

உங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் சமூக நலனுக்குமான பொறுப்புணர்வோடும், சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும்