Top News
| பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்பு விழா | | குழந்தைகளை வேகமாகத் தாக்கும் நோய் | | அட்டாளைச்சேனை விவசாயிகள் எதிர்கொண்ட நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு |
Jun 2, 2025

தமிழின் தாரகைகளாக மிளிர்ந்த வெலம்பொட சிறார்கள்!

Posted on May 28, 2025 by Admin | 232 Views

(அர்பீன்)

க/தெனுவர கல்வி வலயத்தில் உள்ள 18 தமிழ்மொழிப் பாடசாலைகள் இடையே நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழி தின போட்டிகளில் வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலயம் பெரும் வெற்றி பெற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டிகளில் 17 வெற்றிகள் பெற்ற இப்பாடசாலை, 10 முதலாம் இடங்கள், 3 இரண்டாம் இடங்கள், 4 மூன்றாம் இடங்களை தனதாக்கியுள்ளது.

முதலாம் இடங்கள் (10):

  • பிரிவு 1 – கட்டுரை வரைதல்: பி.ஏ. ஹிக்மா
  • பிரிவு 4 – சிறுகதை ஆக்கம்: எம்.பி. ஆத்திகா
  • பிரிவு 4 – குறுநாடக ஆக்கம்: எம்.ஜ. கதீஜா
  • பிரிவு 3 – வாசிப்பு: கே. ஷிம்லா
  • பிரிவு 3 – பேச்சு: எம்.எஸ்.எப். சல்ஹா
  • பிரிவு 5 – பேச்சு: எம்.எஸ்.எப். ஷீமா
  • பிரிவு 2 – பாவோதல்: எம்.எஸ்.எப். ஹம்னா
  • பிரிவு 3 – பாவோதல்: எம்.ஜ. அப்ரா
  • பிரிவு 5 – இலக்கிய விமர்சனம்: எம்.எஸ்.எப். சிப்னா
  • பிரிவு 5 – அறிவிப்பாளர்: எம்.ஆர்.எப். அம்னா

இரண்டாம் இடங்கள் (3):

  • பிரிவு 4 – கட்டுரை வரைதல்: எம்.ஜ. அம்ரா
  • பிரிவு 2 – பேச்சு: ஆர்.எப்.எப். ரஹ்மா
  • தமிழறிவு வினா விடை குழு: பி.யு. இல்மா, எம். சைனப், எம்.ஏ.எஸ். அஸீமா, எம்.எப்.எப். நாதியா, ஏ.எப். ஆதிபா

மூன்றாம் இடங்கள் (4):

  • வினா விடை எழுத்துப் போட்டி: கே. ஷிம்லா, எம்.ஆர். பாத்திமா, எம்.ஐ. ஸய்னா, எம்.என். அக்மல், எம்.ஆர்.எப். சின்பா
  • பிரிவு 4 – பாவோதல்: எம்.ஜி.எம். மிப்ரா
  • பிரிவு 4 – தனி நடிப்பு: எம்.எஸ்.எப். சம்ரா
  • திறந்த விவாதப் போட்டி: எம்.எம்.எப். சஹ்லா, ஏ.ஏ. சபா, எம்.ஆர்.எப். அம்னா

இம்மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர்களான S.L.F. யஸீரா, M.R.F. நிஹாரா, W.M.F. ரிஸ்வானா, J.A.F. ஷிஹானா, M.H.F. றிஸாமா, M.H.M. அன்சார் மற்றும் A.M. மஸாஹிமா ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.பைறூஸ் அவர்கள் இப்பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டதிலிருந்து இப்பாடசாலையானது பல துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.