Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

பல்கலைக்கழக மாணவர்களுக்கு உளவியல் உதவி வழங்க விசேட வேலைத்திட்டம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

Posted on May 29, 2025 by Admin | 200 Views

பல்கலைக்கழகங்களில் உள ரீதியாக பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு மனநல ஆதரவை வழங்கும் நோக்குடன் விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம், உளவியல் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் இணைந்த குழுவால் முன்னெடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களிடையே சமீபத்தில் அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகள், உள மன அழுத்தம் மற்றும் மாணவர்கள் இடையிலான மோதல்கள் ஆகியவை இந்த திட்டத்தின் தேவைபாட்டை வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் பாதுகாப்பாகவும், உளநலத்துடன் கல்வியை தொடரும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமைக்கப்பட்டு, பல தரப்பினருடன் கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, மாணவர்களின் உளநலத்தை பாதுகாப்பதோடு, கல்வி நிறுவனங்களில் வலுவான உளவியல் ஆதரவு அமைப்பை உருவாக்கும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.