Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தேங்காய்ப் பால் தொகுதி நாளை ஆய்வக பரிசோதனைக்கு 

Posted on May 30, 2025 by Hafees | 136 Views

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் நாளை அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு இணைந்து பெற்ற அமைச்சரவை அனுமதிக்கு அமைய, இந்த தேங்காய் பால் கையிருப்பு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தென்னை தொழில் துறையுடன் தொடர்புடைய தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதையும் அதன் மூலம் உள்நாட்டு தேங்காய்களின் விலையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தேங்காய் பால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2025 இல் அமைச்சரவையின் அனுமதிக்குப் பிறகு, 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான அளவில், தேங்காய் பூ, தேங்காய் பால் அல்லது மா, தேங்காய் துண்டுகள் (கொப்பரா அற்ற) போன்ற தேங்காய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல் இருப்பு இது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.