Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

TIN பதிவு எளிமைப்படுத்தும் புதிய QR குறியீடு அறிமுகம்

Posted on May 30, 2025 by Admin | 170 Views

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பதிவு செய்யும் நடைமுறையை எளிமையாக்கும் நோக்கத்தில், புதிய கியூஆர் குறியீடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர். பி. ஜி. எச். பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி, ஏற்கனவே TIN இலக்கத்தை பெற்றவர்கள் தங்களது பதிவுகளை ஒன்லைனில் சோதிக்கவும், சரிபார்க்கவும் முடியும். பதிவு செய்யாதவர்கள், இந்த குறியீடு வழியாக பதிவு செய்வதற்கான வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த சேவையைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, வரி செலுத்துவோர் தாங்கள் தொடர்புடைய உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி நிர்வாகம் மற்றும் முறையான இணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், தற்போது வரை 01 கோடிக்கும் அதிகமான TIN இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், வரி செலுத்தும் பொது மக்களுக்கு சிறந்த சேவையளிப்பதும், தானாகவே நடைமுறையிலுள்ள வரி கட்டுப்பாடுகளை இணைக்கும் வகையிலும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.