Top News
| 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய 62 வயதுடையவர் கைது | | 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் | | பொத்துவில், உகன கல்வி வலயங்களுக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும் என பிரதமர் உறுதி |
Jul 26, 2025

குழந்தைகளை வேகமாகத் தாக்கும் நோய்

Posted on June 1, 2025 by Admin | 100 Views

குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா, மற்றும் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதாக, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நுளம்பு இனப்பெருக்கம் அதிகரித்து, அதன் விளைவாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா பரவல் கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நுளம்புகளின் இனப்பெருக்க இடங்களை அழிக்க பொதுமக்கள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனும் வேண்டுகோளையும் வைத்திய நிபுணர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த நோய்களின் தாக்கத்தால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், டெங்கு உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்றும், சிக்குன்கன்யா தொற்றுக்கு பிந்தைய மூட்டு வலி பல மாதங்கள் நீடிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள், சிக்குன்கன்யா தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும், சில சந்தர்ப்பங்களில் கர்ப்ப காலத்தில் சிக்குன்கன்யா பாதிப்பால் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கே பாதிப்பு ஏற்படலாம் என்றும் டாக்டர் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடியது என்பதால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்