Top News
| 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் | | பொத்துவில், உகன கல்வி வலயங்களுக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும் என பிரதமர் உறுதி | | தாய்லாந்தில் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல் |
Jul 26, 2025

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்பு விழா

Posted on June 1, 2025 by Admin | 124 Views

(அபூ உமர்)

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இக் கல்வி நிறுவனத்தின் வளர்ச்சியின் முக்கியக் கட்டமாக அமைந்த இவ் விழாவில், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.றிஸ்வி, எஸ்.முஹாஜிரின் (அன்வாரி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை, ஏ. ஆதம்பாவா, அஷ்ரப் தாஹிர், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருநிறைவுடன் பங்கேற்றனர்.

விழாவில் உரையாற்றிய விருந்தினர்கள், கல்வியின் சமூக முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இக்கல்லூரி இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழங்கி வரும் சேவையை பாராட்டினர். குறிப்பாக, தகுதியும் நாட்டுப்பற்றும் கொண்ட உலமாக்களை உருவாக்கும் பணியில் இந்தக் கல்வி நிறுவனம் முக்கிய பங்காற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

புதிய கட்டட வசதி, மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை வழங்கி அவர்களின் அறிவாற்றல் மற்றும் ஆளுமை மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் விழா, கல்வி வளர்ச்சியையும் சமூக ஒற்றுமையையும் முன்னேற்றும் நிகழ்வாக அமைந்து, அனைவராலும் பாராட்டப்பட்டு, ஆனந்தமயமாக நிறைவடைந்தது.