Top News
| இலங்கையின் 49வது பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன நியமனம் | | உலக நம்பிக்கை பெற்ற தலைவர்களில் முதல் இடம் யாருக்கு? | | அக்கரைப்பற்று பொதுச் சந்தை சுத்தம் செய்யும் பணி ஆரம்பம் |
Jul 27, 2025

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உயரதிகாரிகள் இடையே சந்திப்பு

Posted on June 2, 2025 by Admin | 104 Views

கிழக்கு மாகாண சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான பிஎஸ்ஜிஎஸ்(PSGS) நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு பயன்படுத்து வேண்டும் என்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல், அம்பாறை மாவட்ட ஆளுநரின் செயலகத்தில் நேற்று முன்தினம் (மே 31) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், கல்வி, சுகாதார, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது, மாவட்ட அபிவிருத்தி, சமூக சேவைகள், கல்வி மற்றும் சுகாதார துறைகளில் நிதி ஒதுக்கீடுகள் சிறப்பாக அமைய வேண்டிய அவசியம் குறித்தும் பேசப்பட்டதாக அறியப்படுகிறது.