Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இன்று பல இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு – எச்சரிக்கை

Posted on June 2, 2025 by Admin | 184 Views

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பலதடவைகள் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவின் போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசலாம்.

மின்னலுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், இவ்வாறான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.