Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

தரமான ஆசிரியர்கள் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

Posted on June 3, 2025 by Admin | 201 Views

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார மறுமலர்ச்சியை முன்னெடுக்க, சிறந்த தரம் வாய்ந்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவையின் தரம் III அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா நேற்று (ஜூன் 2) நடைபெற்றது.

இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர், “நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும் கல்வித்துறையின் வளர்ச்சிக்காகத் தரமான ஆசிரியர்கள் மிக முக்கியம்,” எனக் கூறினார்.

இந்நிகழ்வில் 605 புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 300 பேர் சிங்களம், 203 பேர் தமிழில் மற்றும் 102 பேர் ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் 20 தேசிய கல்வியியல் கல்லூரிகள், 8 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் 112 ஆசிரியர் பயிற்சி மையங்களில் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.