Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஆலோசனைச் சந்திப்பு

Posted on June 4, 2025 by Admin | 197 Views

எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஆலோசனைச் சந்திப்பு இன்று (ஜூன் 4) பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தலைமையில், இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் போது, மாவட்ட அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கில் பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.