Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

முகக்கவசம் அணிதல் கட்டாயம்

Posted on June 4, 2025 by Admin | 261 Views

இம்புலுவன்சா மற்றும் கோவிட் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு, மேல் மாகாண சுகாதார திணைக்களம் புதிய அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

சுகாதார திணைக்களம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், நாட்டின் பல பகுதிகளில் இந்த தொற்றுகள் வேகமாகப் பரவுவதை அடுத்து, முகக்கவசம் அணிவதைப் பற்றிய கட்டுப்பாடுகள் மீண்டும் வலுவாக அமல்படுத்தப்பட உள்ளன.

இதற்கமைய, அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் — குறிப்பாக மீட்டிங் அறைகள், மதிய உணவகங்கள், மின்தூக்கிகள் (லிப்ட்) போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அலுவலகங்களின் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த அறிவுறுத்தலை பயனுள்ளதாக எடுத்துக்கொண்டு, அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.