Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு 12 நாடுகளுக்குத் தடை

Posted on June 5, 2025 by Admin | 184 Views

அமெரிக்க தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 12 நாடுகளின் பிரஜைகள் இந்த தடை உத்தரவில் உள்ளனர்.

இதனுடன், கியூபா மற்றும் வெனிசுவேலா உள்ளிட்ட ஏனைய 7 நாடுகளின் பிரஜைகள் மீது கட்டுப்பாடுகளுடன் கூடிய நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு எதிர்வரும் 9ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகிறது எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.