Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை அதிகாரிகளை கத்தியால் தாக்கிய நபர்

Posted on June 7, 2025 by Admin | 248 Views

வெல்லவாய ஹடபனகல பகுதியில் மின் கட்டணம் செலுத்தாத வீட்டின் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை அதிகாரிகள் குழு எதிர்பாராத முறையில் தாக்குதலை எதிர்கொண்டனர்.

கட்டணம் செலுத்தப்படாததை தொடர்ந்து அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்த நிலையில், வீட்டின் உரிமையாளர் கடும் கோபத்தில் அதிகாரிகளை கத்தியால் தாக்க முயன்றதோடு, தனது கால்சட்டையை கழற்றி அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மின்சார சபை அதிகாரிகள் வெல்லவாய பொலிஸில் புகார் அளித்தனர். இதையடுத்து பொலிஸார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் இந்த மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.