Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உங்களது வாகனம் சட்டவிரோதமானதா என்பதை அறிய புதிய சேவை

Posted on June 8, 2025 by Admin | 335 Views

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்கும் பொதுமக்கள், அந்த வாகனங்களின் சட்டப்பூர்வத்தன்மையை முன்கூட்டியே சரிபார்க்கும் வகையில் இலங்கை சுங்கத் திணைக்களம் புதிய நிகழ்நிலை (online) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவை, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்படும் வாகனங்களை தவறுதலாக வாங்கும் சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சரிபார்ப்பு செய்ய விரும்பும் நபர்கள், சுங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான

👉 https://services.customs.gov.lk/vehicles என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.

இந்த வசதியை பயன்படுத்த, வாகனத்தின் சேசியஸ் (Chassis) எண் மற்றும் நபரின் மொபைல் எண்ணை வழங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, பயனரின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். இந்தக் கடவுச்சொலை பயன்படுத்தி,அந்த வாகனம் சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

சட்டவிரோத வாகனங்கள் வாங்கும் அபாயத்தில் சிக்காமல் இருக்க, இந்த சேவையைப் பொதுமக்கள் பயனுள்ளதாக பயன்படுத்துமாறு சுங்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.