Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்தில் 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்

Posted on June 8, 2025 by Hafees | 170 Views

பொசன் பூரணையை முன்னிட்டு நாளை முதல் அனுராதபுரம், மிகிந்தலை மற்றும் அநுராதபுரத்தில் அமைந்துள்ள 8 வழிபாட்டுத் தலங்களுக்கும் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 3,500 காவல்துறையினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாகக் கொண்டு, போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குளங்களைச் சுற்றி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் இந்தப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக, பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.