Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

அனுராதபுர சிறைச்சாலை அதிகாரி கைது

Posted on June 9, 2025 by Admin | 309 Views

அனுராதபுர சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன இன்று (ஜூன் 09) காலை பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஜூன் 11 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு கைதியை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக எழுந்த ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவரை பொலீசார் கைது செய்துள்ளனர்.