Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்ற கப்பலில் தீ விபத்து

Posted on June 9, 2025 by Arfeen | 175 Views

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கப்பலில் 22 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 18 ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கடலில் குதித்து தப்பியதாகவும் கூறப்படுகிறதுதீ விபத்துக்கான காரணம் குறித்தான தகவல் தெரியவில்லை. மீட்பு நடவடிக்கையில் கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய வான் ஹை 503 என்ற கப்பல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.