Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை மீண்டும் லாபத்தில் செயற்படுகிறது

Posted on June 9, 2025 by Admin | 169 Views

வாழைச்சேனையில் செயலிழந்திருந்த காகிதத் தொழிற்சாலை தற்போது லாபத்தில் இயங்கி வருவதாகவும், அதன் நீண்டகாலப் கடன்களை தீர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

உற்பத்தி திறனை அதிகரிக்க புதிய இயந்திரங்கள் இறக்குமதி செய்யும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்றும், தொழிற்சாலை முழுமையாக செயல்பட வழிவகை செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தொழிற்சாலை மீளுருவாக்க முயற்சியின் ஒரு பகுதியாக, சுற்றுலா வளர்ச்சிக்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் அருங்காட்சியகம், சாகச முகாம் தளம், புகைப்பட மையம் உள்ளிட்ட புதிய வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இவை வாழைச்சேனையை சுற்றுலா நிலையமாக மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.