Top News
| சூடு பிடித்திருக்கும் அட்டாளைச்சேனை தவிசாளர் பதவி | | எரிபொருள் விலை உயர்வு ஜூன் 30 நள்ளிரவு முதல் அமுலில்  | | உணவுப் பெட்டியில் துப்பாக்கியுடன் பாடசாலைக்கு வந்த மாணவன் |
Jul 1, 2025

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை

Posted on June 12, 2025 by Hafees | 38 Views

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.