Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

மின்சார சபையின் அட்டாளைச்சேனை உப அலுவலக உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted on June 14, 2025 by Admin | 168 Views

(அபூ உமர்)

அட்டாளைச்சேனையில் நீண்டகாலமாக இயங்கிய இலங்கை மின்சார சபையின் உப பாவனையாளர் சேவை நிலையத்தில் கடமை புரிந்த உத்தியோகத்தர்களை வேறு காரியாலத்திற்கு அழைத்து உப அலுவலகத்தை இயங்காமல் செயற்பட்டவர்களுக்கு எதிராக இலங்கை மின்சார சபை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வழு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் மின்வலு அமைச்சர் திரு. குமார ஜயக்கொடி தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வேண்டிக் கொண்டார்.

இது தொடர்பாக மின்வழு அமைச்சர் குமார ஜயக்கொடி, அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் உப பாவனையாளர் சேவை அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்தும் செயற்பாடுகள் தொடர்பாகவும் நீண்டகாலமாக இயங்கிய உப அலுவலகத்தில் கடமை புரிந்த உத்தியோகத்தர்களை வேறு காரியாலத்திற்கு அழைத்து உப அலுவலகத்தை இயங்காமல் செயற்பட்டவர்கள் தொடர்பாகவும்
மின்வழு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால அறிக்கைகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.