Top News
| சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும் | | இலங்கையில் வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல் |
Jul 2, 2025

ஈரானின் பொருளாதார வளங்கள் மீது அமெரிக்க , இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதல்

Posted on June 14, 2025 by Admin | 125 Views

ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில், அந்நாட்டு முக்கிய உற்பத்தி மையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், வாகன தொழிற்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுப்படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்க, ஈரான் தன்னிச்சையான பாதுகாப்பு முறைகள் (Self-Defense Systems) மூலம் ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவருகிறது. எனினும், வான் எல்லையை கடந்து வரும் சில போர் விமானங்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறது.

இந்த சூழலில், உலகின் முன்னணி போர் விமானமான அமெரிக்காவின் F-35 விமானம் ஒன்று இன்று ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இது சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இது, இத்தகைய விமானம் சுட்டு வீழ்த்தப்படும் முதல் சம்பவமாகும்.

இந்நிலையில், ஈரான் ராணுவத்தின் பேச்சாளர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்:

“இது வரை உலகம் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை என்ற வகையிலான நவீன ஆயுதங்களை, இஸ்ரேலை நோக்கி எங்களால் பயன்படுத்தப்படும்,” என அவர் எச்சரித்துள்ளார்.

இன்று ஈரானில் ‘காதிர் விழா’ என்ற புனித நாளாக அமைந்ததால், ஈரான் தற்காலிகமாக தாக்குதல்களில் இருந்து விலகி இருந்தது. எனினும், இந்த இரவு அமைதியுடன் கழிகிறதா அல்லது ஈரான் எதிர்வினையுடன் சீறி எழுகிறதா என்பதை உலகம் கண்கொடுத்துப் பார்க்கிறது.