Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

மருதானையில் தோல்வியடைந்த துப்பாக்கிச் சூடு

Posted on June 14, 2025 by Hafees | 274 Views

கொழும்பு – மருதானை, பஞ்சிகாவத்தை அம்மன் கோவிலுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவு இனந்தெரியாத இருவர் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்றுள்ள நிலையில் துப்பாக்கி செயலிழந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் துப்பாக்கி வெடிக்காத காரணத்தால் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தோல்வியடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிதாரிகள் இருவரும் தப்பிச் செல்லும்போது அவர்களிடம் இருந்த தோட்டா ஒன்று தரையில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.