Top News
| 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய 62 வயதுடையவர் கைது | | 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் | | பொத்துவில், உகன கல்வி வலயங்களுக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும் என பிரதமர் உறுதி |
Jul 26, 2025

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 18ஆம் திகதி வரை நிறுத்தம்

Posted on June 14, 2025 by Hafees | 81 Views

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று(14) முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், மேலும் வருகிற 16-ம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், – இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.