Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

சிவனொளிபாத மலை செல்லும் வீதி 10 நாட்களுக்கு பூட்டு

Posted on June 14, 2025 by Hafees | 171 Views

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான வீதி இன்று (14) முதல் ஜூன் 24 வரை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது

இப்பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், புதிய பாலம் அமைப்பதற்காக குறித்த வீதி சாலை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மூடப்பட்டிருக்கும் காலத்தில், வாகன சாரதிகள் நோர்டன் பிரிட்ஜ் சாலை மற்றும் கலுகல, பொல்பிட்டி, லக்சபான வழியாக செல்லும் ஹட்டன் நோர்டன் பிரிட்ஜ் சாலையைப் பயன்படுத்துமாறு நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.