Top News
| அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் |
Aug 18, 2025

தென்ஆப்பிரிக்கா ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது

Posted on June 14, 2025 by Hafees | 65 Views

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன.

74 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா- 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 65 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன்களுடன் (136 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 69 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 66 ரன்னிலும், ஸ்டப்ஸ் 6 ரன்னிலும், ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த மார்க்ரம், 136 ரன்கள் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அத்துடன், தனது பணியை கச்சிதமாக செய்து முடித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி, 83.4ஓவர்களில் இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஆனது.