2025 ஜூன் 12 ஆம் திகதி வெளியாகிய பத்திரிகை செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட, “2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்” என்ற செய்தி தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் கூறப்பட்டது போன்று 2009க்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் தீர்மானம் எதுவும் திணைக்களம் இதுவரை எடுக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும், 2009க்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ள நபர்கள், அவற்றிற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திணைக்களம் ஏற்கனவே ஊடகங்களின் ஊடாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.